கேளிக்கை

இசை நிகழ்ச்சி நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன்- ஏ.ஆர்.ரஹ்மான்

(UTV|INDIA)-கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நடிகர் சிவக்குமார் குடும்பம் 50 லட்சம் நிதி அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் 50 லட்சம் நிவாரணமும், விஜய் சேதுபதி 25 இலட்சம் நிவாரணமும் வழங்கியுள்ளனர்.

விஜய், சிவகார்த்திகேயன், ஜி.விபிரகாஷ் குமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் டெல்டா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கனடாவில் உள்ள துரந்தோவில் டிசம்பர் 24 ஆம் திகதி தான் நடத்தும் இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் என்று அறிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

தொழிலதிபரான அஜித்கை பட நடிகை

உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

சர்கார் படத்தை வாங்க பிரபல நிறுவனம் முயற்சி