சூடான செய்திகள் 1

யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை இன்று முதல்

(UTV|COLOMBO)-புகையிரதங்களில் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் யாசகம் பெறுவோரைக் கைது செய்வது தொடர்பிலான நடைமுறை இன்று(21) முதல் முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிவில் உடையில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.

புகையிரத திணைக்களத்தின் சட்டத்தின் பிரகாரம், புகையிரதங்களில் யாசகம் பெறுவதற்கும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், சிலர் விதிமுறைகளை மீறி தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

 

 

 

Related posts

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு

டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம்…