சூடான செய்திகள் 1

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து

(UTV|COLOMBO)-குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சேவை நோக்கத்திற்காக நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

11 இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை, படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்களை, நிஷாந்த சில்வா விசாரணைக்கு உட்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

புதிய அமைச்சரவை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்…

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து