சூடான செய்திகள் 1

நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி எமது ஆட்சியமைப்புக்கு மிகவும் அவசியம்

(UTV|COLOMBO)-சமயம், இனம், குலம், வகுப்பு, நிறம் என்றவாறு பல வகையில் வேறுபட்டுப் பிரிந்து காணப்படும் தற்போதைய சமூகத்திற்கு முஹம்மத் நபியவர்களின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள முடியுமான பல பாடங்கள் உள்ளன என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் விடுத்துள்ள மீலாத் வாழ்த்துச் செய்தியில், அவர் சமயத்தை நடைமுறைரீதியாக வாழச் செய்த, எளிமையான, சிறந்ததோர் வாழ்வொழுங்குடன் கூடிய, சாதாரண மக்கள் மத்தியில் சாதாரண மனிதராக வாழ்ந்த உன்னத இறைத்தூதர் ஆவார்.

பல சந்ததிகளாக கோத்திரங்களாப் பிரிந்து வேறுபட்டு முரண்பட்ட நிலையில் காணப்பட்ட மத்திய கிழக்கு மக்கள் மத்தியில் முஹம்மத் நபியவர்களின் வாழ்க்கைத் தத்துவம் மற்றும் சமய ஒழுங்குகள் சமயரீதியான சிறந்ததோர் சமூகம் உருவாவதற்குக் காரணமாய் அமைந்தது.

இஸ்லாம் சமயத்தின்படி அவர் இறைவனின் விருப்புக்குரிய இறுதி நபி எனக் கருதப்படுகிறார்.

நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி எமது ஆட்சியமைப்புக்கும் பொதுச் சமூகத்திற்கும் மிகவும் அவசியமான ஒரு சந்தர்ப்பமாக இன்றைய சூழ்நிலை காணப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந்து மூன்று வருடங்களில் நாம் பெற்றுக்கொண்ட ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் மானிட கௌரவம் என்பவற்றை அழித்து நாட்டினைப் படுகுழியில் தள்ளிவிடக் கூடிய கொடியதோர் சூழ்ச்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாம் நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரியை மிகவும் பின்பற்ற வேண்டியவர்களாக காணப்படுகிறோம்.

அந்த உன்னதமான பொறுப்பினைக் கைவிடாது இச்சந்தர்ப்பத்தில் கண்ணியமான சமூகமொன்றுக்காகவும் அமைதியான தேசமொன்றுக்காகவும் பாடுபடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது கௌரவபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் எம்மீது வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ற வகையிலும் ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையிலும் நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை வாழ் சகோதர முஸ்லிம்கள் உட்பட அனைத்து உலக வாழ் முஸ்லிம்களுக்கும் சிறப்பான மீலாத் தினமாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கபில அமரகோன் உயிரிழப்பு…

காலநிலையில் மீண்டும் மாற்றம்

இன்று நாடளாவிய ரீதியில் துக்க தினம் அனுஷ்டிப்பு