(UTV|COLOMBO)-பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதானால் அதற்கான காரணத்தை எழுத்துமூலம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.