வகைப்படுத்தப்படாத

திருமணத்துக்கு முன்பு கர்ப்பமான நேஹா…

(UTV|INDIA)-பிரபல இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நேஹா துபியாவும், இந்தி நடிகர் அங்கத் பேடியும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். டெல்லியில் உள்ள குருத்வாராவில் அவசரமாக இவர்கள் திருமணம் நடந்தது. நடிகர் – நடிகைகள், நண்பர்கள் யாரையும் அழைக்கவில்லை.

நேஹா துபியா கர்ப்பமானதால் உடனே திருமணம் செய்து கொண்டோம் என்று அங்கத் பேடி இப்போது தெரிவித்து உள்ளார். நேஹா துபியா தொகுத்து வழங்கும் டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கத் பேடி இதுகுறித்து கூறியதாவது:-

‘‘நேஹா துபியாவும், நானும் காதலித்தோம். திருமணத்துக்கு முன்பே அவர் கர்ப்பமாகி விட்டார். அதனால்தான் 4 நாட்களில் அவசரமாக ஏற்பாடுகளை செய்து திருமணத்தை முடித்தோம். நேஹா துபியா கர்ப்பமான வி‌ஷயத்தை அவரது பெற்றோரிடம் சொல்ல முடிவு செய்து அவர்கள் வீட்டுக்குச் சென்றேன்.

எனக்கு உணவு கொடுத்து உபசரித்தனர். சாப்பிட்டு முடித்த பிறகு நேஹா துபியா கர்ப்பமானது பற்றி சொன்னேன். அவர்களுக்கு கோபம் வந்தது. என்னை தாறுமாறாக திட்டினார்கள். திருமணத்துக்கு முன்பு இப்படி நடந்து கொள்வது முறைதானா? என்று கண்டித்தார்கள். கோபத்தில் கத்தியபோது நேஹா துபியாவின் தாய் மூக்கில் ரத்தம் வந்தது. அவர்களிடம் உண்மையை சொல்ல பயமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் சொல்லி விட்டேன். அதனால்தான் திடீர் திருமணத்தை நடத்த வேண்டி வந்தது.’’ இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

Related posts

Navy renders assistance to a group of distressed passengers in Northern seas

கேரள கஞ்சாவுடன் பெண் கைது

புதிய வரிச்சலுகை திட்டம் – நிதி அமைச்சர்