சூடான செய்திகள் 1

சபாநாயகர் நியாயமாகவும் தைரியமாகவும் செயற்படுகின்றார் – ரிசாட் பதியுதீன்

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற முன்னெடுப்புக்களை நியாயமாகவும் தைரியமாகவும் முன்னெடுத்துச் செல்கின்றார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று (16) ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலையைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றில் பிரதமரை நீக்குவதற்காக கொண்டுவந்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்டும் இன்னும் தான்தான் பிரதமர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் அவர்களுடைய அரசாங்கத்தையும் இன்றைய நிலையிலும் நாங்கள் நம்பிக்கையில்லாமல் இருக்கின்றோம்.

எனவே சபாநாயகர் அதிகபட்ச பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள்களை ஏற்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் அவர் நியாயமாக, தைரியமாக செயற்படுகின்றார் அவருடைய செயற்பாட்டில் நாங்கள் எந்தவொரு குறைகளையும் காணவில்லை என்று ரிசாட் பதியுதீன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு!!

தோட்டத் தொழிளார்களை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் – சஜித்

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்