சூடான செய்திகள் 1

போக்குவரத்து கட்டணங்களை குறைக்க முடியாது

(UTV|COLOMBO)-எரிபொருள்களின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பேருந்து போக்குவரத்து கட்டணங்களை குறைக்க முடியாதென பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துவருகின்ற நிலையில், பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துவருகின்றமையால் தாங்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேருந்து கட்டணங்களின் விலைகளை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், முச்சக்கரவண்டிகளுக்கான முதல் ஒரு கிலோமீற்றருக்கான கட்டணத்தை ஐம்பது ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழிற்துறையினர் தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழிற்துறையினர் சங்கத்தினர், உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பினால் கட்டணங்களை குறைக்க முடியாதென தெரிவித்துள்ளனர்.

Related posts

வடமேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இன்று இலங்கைக்கு

காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு