சூடான செய்திகள் 1

14 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

(UTV|COLOMBO)-14.3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களை இலங்கைக்குள் கடத்த முயன்ற மூன்று நபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் இருந்து நேற்று (15) இரவு 10.50 மணி அளவில் இலங்கைக்கு வந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 தங்க பிஸ்கட்கள் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் 48 பகுதிகளாக 6 உலோக குழாய்களில் மறைத்து கடத்தப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 2,399.81 கிராம் எனவும் அவை சுமார் 14,398,860 ரூபா பெறுமதியுடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 48, 46 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் கண்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

இன்று (14) மாலைதீவு சபாநாயகர் நஷீட் இலங்கைக்கு

கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு…

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு