சூடான செய்திகள் 1

கஜ சுறாவளி தமிழ் நாட்டை நோக்கி கடந்துள்ளது-உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி 117

(UTV|INDIA)-கஜ புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்துள்ளது.

இந்த சூறாவளி அடுத்து வரும் ஆறு மணித்தியாலங்களில் நலிவடைந்து மேற்குத் திசை நோக்கி நகருமென எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களை நாட வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். சில சமயங்களில் மரங்களும்,மின்கம்பங்களும் முறிந்து விழலாம்.

இது குறித்து அவதானம் தேவை. தொலைபேசி ஊடாக அவசர உதவிகளைப் பெறலாம் இதற்காக அழைக்க வேண்டிய இலக்கம் 117 என்பதாகும்.

இந்த சூறாவளி காரணமாக வடக்கு வடமத்திய மாகாணங்களிலும்இ புத்தளம் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று அதிகாலை காற்றுடன் மழை பெய்யலாம்.

யாழ்ப்பாண குடநாட்டில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம். சில சமயங்களில் காற்றின் வேகம் 100 கிலோமீற்றர வரை அதிகரிக்க கூடும்.

மன்னார்,புத்தளம், திருகோணமலை, அனுராதபுரம், பொலநறுவை, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் கடும் காற்று எதிர்பார்க்கப்படுகிறது. வடமாகாணத்தில் கடும் காற்றுடன் அடைமழை பெய்யலாம்.

யாழ் குடாநாட்டிலும்இ கிளிநொச்சி மாவட்டத்தில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்கப்படுகிறது. திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை – மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடலில் மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம். காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீற்றர் வரை அதிக்க கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பதாக மாறக்கூடும்.

கஜ சூறாவளியின் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை – மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புத்தாண்டு அமையட்டும்

யோஷித ராஜபக்ஷவிற்கு பதவி உயர்வு

ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற குழுவானது இன்று கூடுகிறது