விளையாட்டு

46 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி பின்னிலையில்

(UTV|COLOMBO)-இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேரம் நிறைவடையும் போது விக்கட் இழப்பின்றி ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் இருந்தது.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 336 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணிக்காக ரொஷேன் சில்வா 85 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

முன்னதாக இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.

இதற்கமைய, இலங்கை அணியைவிட 46 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி, இன்றைய தினம் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடரவுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா அச்சுறுத்தல் எரெடிவைஸ் கால்பந்து தொடர் இரத்தாகும் சாத்தியம்

விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தரவின் சாதனை

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!