சூடான செய்திகள் 1

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக 2992 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதன் மூலம் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

 

 

Related posts

எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை நிறைவு

அவசரமாக கூடுகிறது IMF இன் நிறைவேற்று சபை

editor

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்-உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்து சேவை