கிசு கிசு

ஐ. தே. கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்றத்திற்குள் வந்திருந்தனர்?

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (15) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தனது ஆசனத்தில் அமர்ந்து இருந்த காரணத்தினால் தான் இவ்வாறு அமைதியற்ற நிலமை ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றிருந்தால் இவ்வாறான நிலமை ஏற்பட்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்றத்திற்குள் வந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கோஹ்லிக்கு பெண் பிள்ளை : மொய்த்தது விளம்பர நிறுவனங்கள்

தஹமுக்கு போட்டியாக சமிந்த்ராணி

இந்த அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும்…