சூடான செய்திகள் 1

பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை…

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வின்போது, பிரதமர் மஹிந்த ரஜபக்ஸ விசேட உரையாற்றினார்.

முன்னாள் அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்சினையைத் தீர்த்தமுடியாத காரணத்தினால், ஜனாதிபதியால் நான் பிரதமராக நியமிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பேசிய பிரதமர், சப்தமிடுவதன் மூலம் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற முடியாது எனக் கூறினார்.

அதேநேரம், நான் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்துள்ளேன. ஆகவே, இந்தப் பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நிலவும் பிரச்சினை தொடர்பான தீர்வை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்க வழங்க வேண்டும் என்பதற்காக, பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும். எனவே, பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதன்பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் விசேட உரையை நம்பமுடியாதெனத் தெரிவித்து, பா.உ. லக்ஸ்மன் கிரியெல்ல கொண்டுவந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பை மேற்கொள்ள முயற்சித்த சந்தர்ப்பத்தில், அங்கு அமளிதுமளி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற சபையிலிருந்து சபாநாயகர் வௌிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில், முசலியில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

கொழும்பு – லோட்டஸ் வீதிக்கு பூட்டு