கிசு கிசு

இரத்தம் ஓட,பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலுனு அமுனுகம?

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் இன்று -15- காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்பிக்கும்போது சபையில் அமிளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி நகர்ந்தனர்.

அவ்வேளை சபாநாயகரை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களும் படைக்கல சேவியர்களும் அவ்விடத்தில் குவிந்தனர். இதனிடையே கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் திலுனு அமுனுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை முறித்த நிலையில் அவரது கையில் காயமடைந்து இரத்தம் ஒழுக சபா பீடத்திலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பரபரப்பை ஏற்படுத்தும் #Me Too விவகாரம்!-கோத்தாபயவின் உத்தரவில் பாலியல் துஷ்பிரயோகம்?

உணவகங்களில் உணவு உட்கொள்வோருக்கு எச்சரிக்கை!!!

பால்மாவுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும்