சூடான செய்திகள் 1

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை…

(UTV|COLOMBO)-மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறியளவில் மழை பெய்யக் கூடும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

“GAJA” என்ற சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 700 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.2N, கிழக்கு நெடுங்கோடு 85.6E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து பாரிய சூறாவளியாக விருத்தியடையும் சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக பொத்துவிலிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதோடு கடலும் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

Related posts

நாளையும் CID யிற்கு நாமல் ராஜபக்ஷ அழைப்பு

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்