சூடான செய்திகள் 1

புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு

(UTV|COLOMBO)-புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்த பிரேரணை ஒன்று பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனமாகது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால், ஒக்டோபர் 26ம் திகதி நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் இந்த பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்த பிரேரணை ஒன்று பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

 

Related posts

1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

இரா.சம்பந்தன் இந்தியா பயணம்

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் த.தே.கூ வின் இறுதி முடிவு