சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பேர் வாக்களிப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கூறியுள்ளார்.

இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்து அவர்கள் வாக்களித்துள்ளதாக ஆர். சம்பந்தன் கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.

 

 

 

Related posts

ஐ.தே.கட்சியின் சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநர்கள் ஐவர் நியமனம்

நாவிதன்வெளி மு.கா பிரமுகர்கள், ம.கா வில் இணைவு!