சூடான செய்திகள் 1

வெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்புக்கு அமைவாககேயாகும் என்று வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று (12) இடம்பெற்ற வெளிநாட்டு தூதுவர்களுடான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு பொதுமக்களின் வாக்குகளால் அந்த அதிகாரம் காணப்படுகிறது. இலங்கையின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் நாட்டில் அமைதியான நிலைமை நிலவுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்காக பெருமை நாட்டு மக்களையே சாரும். ஜனநாயகத்திற்காக அரசாங்கம் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கை உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நீண்ட கால ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

பொத்துவிலில் 3வர் போதைப்பொருளுடன் கைது!

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்