சூடான செய்திகள் 1

தேர்தல் மாவட்டங்களுக்காகத் தெரிவுசெய்யப்படவிருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது..

 

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படும் .

தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பீ.சீ.பெரரவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல மாவட்டங்களுக்காகத் தெரிவாகும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை விபரம் பின்வருமாறு:

கொழும்பு தேர்தல் மாவட்டத்திலிருந்து 19 உறுப்பினர்கள் ஆகக் கூடுதலாக தெரிவு செய்யப்படவுள்ளார்கள். 
திருகோணமலை தேர்தல் மாட்டத்தில் – நான்கு உறுப்பினர்கள் 
கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் – 18 உறுப்பினர்கள்
குருணாகல் தேர்தல் மாவட்டத்தில் 15 உறுப்பினர்கள்
கண்டி தேர்தல் மாவட்டத்தில் 12 உறுப்பினர்கள்
இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தில் 11 உறுப்பினர்கள் 
களுத்துறை தேர்தல் மாவட்டத்தில் 10 உறுப்பினர்கள் 
அனுராபுரதம் தேர்தல் மாவட்டத்தில் 9 உறுப்பினர்கள்
கேகாலை தேர்தல் மாவட்டத்தில் 9 உறுப்பினர்கள்
நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் 8 உறுப்பினர்கள்
புத்தளம் தேர்தல் மாவட்டத்தில் 8 உறுப்பினர்கள்
பதுளை தேர்தல் மாவட்டத்தில் 8 உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்கள்
மாத்தறை தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்கள்
ஹம்பாந்தோட்ட தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்கள்
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்கள்
வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 உறுப்பினர்கள்
மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 6 உறுப்பினர்கள்
மாத்தளை தேர்தல் மாவட்டத்தில் 5 உறுப்பினர்கள்
பொலன்;னறுவை தேர்தல் மாவட்டத்தில் 5 உறுப்பினர்கள்

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் அந்தந்த மாவட்டங்களில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மூன்று வேட்பாளர்களை கூடுதலாக தேர்தலில் நிறுத்துவது அவசியமாகும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தத் தேவையில்லை.
சுயேட்சை குழுக்கள் தேர்தல் மாவட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக கண்டுப்பணம் செலுத்துவது அவசியமாகும்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/GAZZETE-1.jpg”]

 

 

 

 

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/11/GAZZETE-2.jpg”]

 

 

 

 

 

Related posts

பிரதமரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை