சூடான செய்திகள் 1

கிராமியப் புரட்சி வேலைத்திட்டம் இரத்து

(UTV|COLOMBO)-கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்ட கிராமியப் புரட்சி வேலைத்திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வருமாறு இரத்து செய்ய அரசாங்கத் தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்ட நிதியையும், வேலைத்திட்ட முன்னெடுப்பையும் இரத்து செய்யுமாறு குறித்த மாவட்ட செயலாளர்களுக்கு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் கிராமப் புரட்சி வேலைத்திட்டத்தை முழுமையாக இரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இரத்து செய்யப்பட முடியாத வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மத்திய வங்கியால் உடனடியாக மீளப்பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

குளியாப்பிட்டிய பகுதியில் ஹொரோயினுடன் ஒருவர் கைது

எதிர்ப்பு பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..

மூவர் கைது…