சூடான செய்திகள் 1

மாபெரும் கூட்டணியுடன் பிரதமர்?

(UTV|COLOMBO)-ஸ்ரீறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ றிலங்கா சுதந்திர கட்சி என்பன ஒன்றிணைந்து செயற்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் நேற்று நடந்த சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது கூட்டணிக்கான இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும், அதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் பிரதமர் மகிந்த கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, ஸ்ரீ றிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

 

 

 

 

Related posts

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வாகன நெரிசல்

குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்கவின் எச்சரிக்கை