சூடான செய்திகள் 1

பரீட்சைகளுக்கு தடங்கல் இல்லாத வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்-அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்கு எதுவித பாதிப்பும் இல்லாதவாறு பொதுத் தேர்தல் நடத்தப்படுமென கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொள்ளாமல் செயற்பட்டால் மக்களே அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.

பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரும் இணைந்து செயற்பட முடியவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள அதிகாரம் உண்டு என அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை, நிலையான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு மக்களுக்குள்ள உரிமைக்கு இடமளித்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி தீர்மானித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜூலையில்…

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்