கேளிக்கை

இலியானாவா இது?

(UTV|INDIA)-நடிகைகள் நடிப்பில் கவனம் செலுத்துவது ஒருபக்கம் இருந்தாலும், தங்களது உடல் எடை பற்றி கவலைப்படுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஹீரோக்களுக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற பாலிசி, கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு சில நடிகைகளுக்கு இருந்து வருகிறது. ஆக்‌ஷன் ஹீரோக்கள்போல் ஆக்‌ஷன் ஹீரோயின் ஆக முயன்ற சில நடிகைகள் தோல்வி அடைந்தனர். கமல், சூர்யா, விக்ரம் போன்றவர்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்ப தங்களது உடற்தோற்றத்தை மாற்றி நடிப்பதை கண்ட அனுஷ்கா, ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 100 கிலோ உடல் எடைபோட்டு குண்டாகி நடித்தார். அதன்பிறகு உடல் எடையை குறைக்க படாதபாடுபட்டு வருகிறார்.

நடிகை நயன்தாரா ஆரம்ப கட்டத்தில் கொழுக் மொழுக்கென்று நடிக்க வந்தாலும், பின்னர் தனது உடலை ஒல்லிபிச்சான் தோற்றத்துக்கு மாற்றி, அதையே மெயின்டெய்ன் செய்து வருகிறார். அவரைப்பார்த்த லட்சுமி மேனன், அஞ்சலி உள்ளிட்ட சில நடிகைகள் ஒல்லியான தோற்றத்துக்கு மாறியிருக்கின்றனர். நண்பன், கேடி போன்ற படங்களில் நடித்தவர் இலியானா. தென்னிந்திய படங்களிலிருந்து விலகி பாலிவுட்டில் நடிக்கச் சென்றதும் ஒல்லி தோற்றத்துக்கு மாறினார்.

சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் தென்னிந்திய படத்தில் நடிக்க வந்திருக்கும் நிலையில் தனது உடல் எடையை ஏற்றியிருக்கிறார். தென்னிந்திய ரசிகர்களுக்கு குஷ்புபோல் கும்மென்று இருக்கும் நடிகைகளைத்தான் அதிகம் பிடிக்கிறது என்று கோலிவுட்டில் பேச்சு உள்ளதால், இலியானாவும் வெயிட் போட்டிருக்கிறாராம். தெலுங்கில் ‘அமர் அக்பர் ஆண்டனி’ படத்தில் நடித்திருக்கும் இலியானாவின் பர்ஸ்ட் லுக் ஸ்டில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது இலியானாவா? அல்லது அனுஷ்காவா? என்று கேட்கும் அளவுக்கு குண்டான தோற்றத்தில் இருக்கிறார். அவரது தோற்றத்தை கண்ட ரசிகர்கள், இது இலியானாவா? அனுஷ்காவா என்று குழப்பமான கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

 

 

Related posts

‘விஜய் 61’ படத்திற்கு இதைவிட சூப்பரான தலைப்பு பொருந்துமா?..கசிந்த தகவல்

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நான்

சோனாலி பிந்த்ரேவிற்கு விக் அனுப்பிய ஹீரோயின்