கேளிக்கை

ரொமான்ஸ் மட்டும் தான், திருமண எண்ணம் இல்லை

(UTV|INDIA)-பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கும் பாலிவுட் மாடல் ரோமனுக்கும் காதல் இருப்பதாக செய்தி வெளியான நிலையில், ரொமான்ஸ் மட்டும் தான், திருமண எண்ணம் இல்லை என்று சுஷ்மிதா தெரிவித்துள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில், நாகர்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்திருந்தார். பின் முதல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சக்கலக்கா பேபி’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன்முதலாகப் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர். தற்போது இவருக்கு 42 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ரெனீ, அலிசா என்ற இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதா, சில சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். நட்சத்திர ஓட்டல் அதிபர் ஒருவருடன் அவருக்குக் காதல் மலர்ந்து அவரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர்.
இந்த நிலையில் சுஷ்மிதா சென் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரோமன் ஷால் என்ற 27 வயது மாடலை காதலித்து வருகிறார். முதலில் கிசுகிசுவாக பரவிய இந்தத் தகவலை பின்னர் சுஸ்மிதாவே உறுதிப்படுத்தினார். இருவரும் தாஜ்மகாலுக்கு ஜோடியாக சென்று எடுத்துக்கொண்ட படத்தை சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தினார். படத்தின் கீழ், எனது வாழ்க்கையின் காதல் என்று குறிப்பிட்டிருந்தார்.
இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள சுஷ்மிதா சென், இந்த உலகம் என்னுடைய திருமண செய்தியை எதிர்பார்க்கிறது. ஆனால் எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. என்னை பற்றிய வதந்திகள் காணாமல் போகும். தற்போது நான் ரோமனுடன் ரொமான்ஸில் மட்டுமே இருக்கேன் என்று கூறியுள்ளார்.

Related posts

யோஷித ராஜபக்ஷ்வுக்கு திருமண வாழ்த்துக்கள் (photos)

விஜய்யுடன் இணையும் கீர்த்தி

ரஜினியை நேரில் சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனை