(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் இன்று(12) பிற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதில் போட்டியிடும் கட்சி மற்றும் இலக்கங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படுமென கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.