சூடான செய்திகள் 1

டெங்கு நுளம்புகள் உருவாகும் சூழ்நிலை

(UTV|COLOMBO)-மேல் மாகாணத்தில் அதிகளவில் டெங்கு நுளம்புகள் உருவாகும் வகையிலான சூழ்நிலைகள் இருப்பதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்களும், கம்பஹாவில் 4 ஆயிரத்து 522 மற்றும் களுத்துறையில் 2ஆயிரத்து 531 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடெங்கிலும் மொத்தமாக இந்த ஆண்டு 41 ஆயிரத்து 600 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 48 பேர் இந்த ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் இந்த மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் நுளம்புக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்

திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி