சூடான செய்திகள் 1

பலமான காற்றுடன் மழை

(UTV|COLOMBO)-இலங்கையைச் சூழ காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு,வடமத்திய, வடமேல், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

இன்று பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

களுகங்கை நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை

பள்ளிவாசல்களில் அறிவியுங்கள் மாணவர்கள் வீதியில் நின்றால் அழைத்துச் செல்வோம் – பொலிஸ்