சூடான செய்திகள் 1

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன கடமையேற்பு

(UTV|COLOMBO)-பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் செனவிரத்ன தனது கடமைகளை உத்தியோபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது , சமய வழிபாடுகளுக்கு மத்தியில் மகா சங்க நாயக்கர்களின் ஆசீர்வாதத்துடன் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு இராஜாங்க அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில்,

நாட்டில் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் சேவையாற்றும் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாம் செயற்படவேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் இதன்போது, நாட்டின் நலன்கருதி அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர உள்ளிட்ட மத பிரமுகர்கள், அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

Related posts

கோட்டாவை விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

களு, ஜின் கங்கைளின் நீர் மட்டம் உயர்வு

இன்று முதல் விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பம்