சூடான செய்திகள் 1

சபாநாயகர் – கட்சித்தலைவர்கள் இடையேயான சந்திப்பு இன்று(07)

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (07) மாலை இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடலுக்காக, கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்றக் கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டு நடவடிக்கை எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப ஆசன ஒதுக்கீட்டை ​மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இன்று 10 மணிநேர நீர் விநியோகத்தடை

பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி காமினி செனரத் விஷேட மேல் நீதிமன்ற முன்னிலையில்..