விளையாட்டு

இந்திய அணி 71 ஓட்டங்களால் வெற்றி

(UTV|INDIA)-இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது 20க்கு20 போட்டியில் இந்திய அணி 71 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய இந்திய அணி 2 விக்கட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களைப் பெற்றதுடன், 20க்கு20 போட்டிகளில் அதிக சதம் அடைத்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

இந்தநிலையில் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இந்திய அணி 2க்கு பூச்சியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இரு அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான 20க்கு 20 போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

Related posts

ஒரே பந்தில் 13 ஓட்டங்கள் – உலக சாதனை படைத்த ஜெய்ஷ்வால்.

கிரிக்கெட் வீரர்களின் கொடுப்பனவுகள் அதிரடியாக உயர்வு!

திமுத் மன்னிப்புக் கோருகிறார்