சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு அமையவே பாராளுமன்ற செயற்படும்

(UTV|COLOMBO)-ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்புக்கு அமைவாகவே பாராளுமன்ற பொதுச்செயலாளர்கள் அலுவலகத்தின் அதிகாரிகள், செயற்படுவார்கள் எனப் பாராளுமன்றத்தின் பிரதி பொதுச்செயலாளர் நீல் இந்தவெல தெரிவித்துள்ளார்.

16ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற அமர்வானது, எதிர்வரும் 14ஆம் திகதி மீள நடத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த சபாநாயகர், பாராளுமன்றத்தில் ஒரு தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், ஏற்கனவே இருந்த கட்டமைப்பே பின்பற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கருத்துக்கு பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பாராளுமன்றத்தின் பிரதி பொதுச்செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது,அதன் ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இன்னும் தங்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனம்…

பெண் ஜனாதிபதி வேட்பாளர்; யார் இந்த கலாநிதி அஜந்தா பெரேரா?

அரச நிர்வாக அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில்