வகைப்படுத்தப்படாத

புயல் தாக்கியதால் 30 பேர் பலி

(UTV|ITALY)-இத்தாலியில் கடந்த ஒரு வாரமாக மிரட்டிக் கொண்டிருந்த புயல் நேற்று கரையை கடந்தது. அப்போது பலத்த காயற்றுடன் மழை கொட்டியது. இதனால் வடக்கு வெனிடோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இவை தவிர சிசிலி, தெற்கு சர்டினியா பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகின. சிசிலி தீவில் தாஸ்டில் டாக்சியா என்ற பகுதி கடும் சேதம் அடைந்தது. அங்கு மிலிசியா என்ற ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. அதில் 2 குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். அவர்களில் குழந்தைகளும், முதியவர்களும் அடங்குவர். அதே நேரத்தில் பலியானவர்களின் குடும்பத்தில் இருந்து 3 பேர் மட்டும் மரங்களில் ஏறி உயிர் தப்பினர்.

வெள்ளத்தில் சிக்கி 3 கார்கள் அடித்து செல்லப்பட்டன. அதில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காற்று வீசியதால் மரங்கள் விழுந்தும் வீடுகள் இடிந்தும் 17 பேர் பலியாகினர். இதுவரை 30 பேர் உயிர்ழந்தள்ளனர்.

மழை வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மூழ்கி கிடக்கின்றன. 2 லட்சத்து 500 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டிருந்த பைன்ஆப்பிள் தோட்டங்கள் அழிந்து விட்டன.

கடும் பாதிப்புக்குள்ளான சிசிலியில் ரோடுகள் மூடப்பட்டன. பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பொழுதுபோக்கு இடங்களை மூட மேயர் உத்தர விட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று

துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

Fortnite පරිගණක ලෝක ශූරතාව 16 හැවිරිදි Kyle Giersdor ට