சூடான செய்திகள் 1

நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO)-தென் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நவம்பர் 6 – 8 காலப்பகுதியில் மேற்கு – வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கை மற்றும் மன்னார் வளைகுடாவுக்கு குறுக்காக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை, குறிப்பாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இரவிலிருந்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

களனிவெளி ரயில் சேவையில் தாமதம்

இலங்கையில், 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும்!!