சூடான செய்திகள் 1

பாராளுமன்றை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளில் இன்று (05) நண்பகல்12 மணி முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள பேரணி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற வீதியின் தியத்த உயன, பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகில் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று நண்பகல் முதல் அப்பகுதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பிரதி பொலிஸ்மா அதிபர் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

மாலபே, அத்துருகிரிய பகுதிகளிலிருந்து கொழும்பிற்கு பிரவேசிக்கும் மற்றும் பன்னிப்பிட்டிய, ஹோக்கந்தர, தலவத்துகொட ஊடாக கொழும்பிற்கு பிரவேசிப்பவர்களும், குறித்த வீதிகளூடாக கொழும்பிலிருந்து வௌியேறுபவர்களும் மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவதால் மாற்று வீதிகள் தொடர்பிலும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன், அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள பேரணி காரணமாக சுமார் 1,200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வீீீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

உயர் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

ஐ.தே.தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் சபையில் தோற்கடிப்பு