வளைகுடா

ஜமால் கசோகி மிகவும் ஆபத்தானவர்!

(UTV|SAUDI)-படுகொலை செய்யப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமால் கசோகி மிகவும் ஆபத்தானவர் என்று சவுதியின் இளவரசர் மொஹமட் மின் சல்மான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகளிடம் அவர் இதனைக் கூறி இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கசோகி காணாமல் போவதன் பின்னர், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரிடம் சவுதி இளவரசர் தொலைபேசியில் உரையாடும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

எனினும் அவர் இந்த கருத்தை வெளியிடும் போது, கசோகி கொலை செய்யப்பட்டார் என்பதை சவுதி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும் இந்த தகவலை சவுதி அரேபிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

கசோகி அமெரிக்க பத்திரிகைகளில் கடமையாற்றிய சவுதி பிரஜையாவார்.

அவர் சவுதி அரச நிர்வாகத்துக்கு எதிராக பல்வேறு விமர்சன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 2ம் திகதி சென்றதன் பின்னர் காணாமல் போய் இருந்த அவர், கொல்லப்பட்டதாக பின்பு ஒப்புக் கொள்ளப்பட்டது.

எனினும் இன்னும் அவரது சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு

கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை

பாராளுமன்றில் பெண்களுக்கு 50 வீத உறுப்புரிமை