கேளிக்கை

தீயாக பரவிய அனுஷ்காவின் செய்தி…

(UTV|INDIA)-அனுஷ்காவுக்கு திருமணம் என்ற தகவல் தீயாக பரவியது. அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன் பிறகு அவர் பிரபாஸின் சாஹோ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் உடல் எடை பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து உடல் எடையை குறைக்க அவர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அனுஷ்கா தனது காலை புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்களோ அவருக்கு திருமணம், அதை தான் இப்படி சொல்லாமல் சொல்கிறார் என்று முடிவு கட்டிவிட்டனர். இந்நிலையில் இது குறித்த உண்மை என்னவென்பது தெரிய வந்துள்ளது.

அனுஷ்காவுக்கு திருமணம் எல்லாம் இல்லையாம். அவர் ஐரோப்பாவில் உடல் எடையை குறைக்கும் சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம். விரைவில் ஸ்லிம் அனுஷ்காவாக திரும்பி வந்து படங்களில் நடிக்கப் போகிறாராம். அவர் திரும்பி வந்ததும் தமிழ் படத்தில் நடிக்கப் போவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனுஷ்காவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் இந்த ஆண்டே திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் நினைத்தனர். மாப்பிள்ளை பார்க்கும் வேலையும் தீவிரமாக நடந்தது. இந்நிலையில் அனுஷ்கா திருமணத்திற்கு தயாராக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர் இன்னும் சில ஆண்டுகள் படங்களில் நடிக்க விரும்புகிறாராம்.

சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவை பார்த்த ரசிகர்கள் அவர் ஆன்ட்டி போன்று இருப்பதாக விமர்சித்தனர். இதையடுத்து அவர் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் (video)

மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு

அமிதாப் பச்சன் மறுப்பு