(UTV|COLOMBO)-உலக வங்கியின் 2019ம் ஆண்டுக்கான வர்த்தக ஈடுபாட்டு சுட்டெண் பட்டியலில் இலங்கை 11 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது.
190 நாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் 111ம் இடத்தில் இருந்த இலங்கை, 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் 100ம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருக்கிறது.
அத்துடன் இந்த ஆண்டு இலங்கை 61.22 புள்ளிகளப் பெற்றுள்ளது.
வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கான இலகுத்தன்மை, வரி முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இந்த சுட்டெண் தரப்படுத்தல் பட்டியல் உலக வங்கியால் தயாரிக்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]