சூடான செய்திகள் 1

12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக துனேஷ் கங்கந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்நேற்று  மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த, பிரதமரை நேற்று  சந்தித்து ஆதரவு தெரிவித்ததை அடுத்து இராஜாங்க அமைச்சராக நேற்று  மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று  மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாவலி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக டீ.எம்.ஏ.ஆர்.பீ. திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

வௌிவிவகார அமைச்சின் செயலாளராக ஆர்.பி. ஆரியசிங்கவும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளராக எல். ஜயம்பதியும் ஜனாதிபதியிடம் நியமனக்கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

விவசாய அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.எஸ்.ருவன்சந்த்ர நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி பீ.எம்.எஸ்.படகொட மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்கசக்தி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளராக பத்மசிறி ஜயமான்னவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளராக எச்.டி.கமல் பத்மசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக வீ.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எம்.எம்.பி.கே.மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எஸ்.எம்.மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஹெட்டிஆராச்சி நியமனக் கடிதம் பெற்றுக்கொண்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை

தொடர்ந்தும் சட்டவிரோதப் பொலித்தீன் பாவனை