சூடான செய்திகள் 1

எவன்கார்ட் வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 09ம் திகதிக்கு ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(26) உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியதாக எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பணம் வழங்கியது மற்றும் அரச உத்தியோகத்தர் என்ற வகையில் பணம் பெற்றுக் கொண்டமை ஆகியன இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தண்டணைக்குறிய தவறு என்று தெரிவித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கிங்சி வீதி-கேரி கல்லூரி சுற்றுவட்டம் வரை ஒருவழிப் போக்குவரத்து?

பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கு இல்லங்கள்-ஜனாதிபதி

இடைக்கால கணக்கு அறிக்கை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது