சூடான செய்திகள் 1

ரவியின் வீட்டை படம்பிடித்த இருவர் கைது

(UTV|COLOMBO)-முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டை, ட்ரோன் கெமரா மூலம் வீடியோப் பதிவு செய்ததாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், வனவளத்துறைத் திணைக்கள அதிகாரி எனவும் மற்றையவர், ட்ரோன் கெமரா இயக்குநர் என்றும், பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன்,கைது செய்யப்பட்டவர்கள் இன்று(26) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது வீட்டை, ட்ரோன் கெமரா மூலம் வீடியோப் பதிவு செய்வதாக, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால், பாராளுமன்றத்தில் நேற்று(25) தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், வனவளத்துறைத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்று நடும் வேலைத்திட்டத்துக்குத் தேவையான வீடியோப் பதிவொன்றே செய்யப்பட்டதாகவும் இதற்காக, ட்ரோன் கெமரா மூலம் வீடியோப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ​கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ட்ரோன் கெமராவொன்றை வானில் செலுத்துவதாயின், சிவில் விமானச் சேவை அதிகாரியின் அனுமதியைப் பெறவேண்டும் என்பதோடு, அது தொடர்பில், உரிய பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்திருக்க வேண்டும்.

இந்நிலையில், இவ்வாறான நடைமுறையை, உரிய திணைக்கள அதிகாரி பின்பற்றியிருக்கவில்லையென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடை

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கஜா மொஹதீன் அலி உஸ்மான் கைது

டெங்குக் காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு