சூடான செய்திகள் 1

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் வேறு சிறைச்சாலைகளிற்கு இடம்மாற்றம்

(UTV|COLOMBO)-அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள 8 கைதிகள் வேறு சிறைச்சாலைகளிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் குறித்த சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 8 கைதிகள் வேறு சிறைச்சாலைகளிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்புக் கடமைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அண்மையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்திய கைதிகள் களுத்துறை, காலி, மொனராகலை உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்: ஜனாதிபதி ரணில்