கிசு கிசு

தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் பயப்படுகிறது?

(UTV|COLOMBO)-தங்காலையில் நடைபெற்ற மத நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆகியன எதிர்கால தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கு ஏதேனும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

அவ்வாறான தீர்மானம் எதவும் இல்லை எனவும் தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் பயப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மேலும், 25 வருடங்களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தாம் நடத்தியதாகவும் அதுவும் தற்போது கலையவுள்ள நிலையில், அவர்களின் சலுகைகளை தற்போதுள்ள அரசாங்கம் பறித்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

தனி நபர் பிரேரணை தொடர்பாக வினவப்பட்ட போது, அதனைக் கொண்டு வருவதால் பயனில்லை என அவர் குறிப்பிட்டார்.

பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அவர்களே தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பினை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் RAW அமைப்புடனான நெருக்கடி தொடர்பில் கருத்துத் தெரிவித்த போது, ஜனாதிபதிக்கு அவ்வாறான ராஜதுரோக செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது என்றால் அதனை வௌிப்படுத்த வேண்டும் எனவும் இந்த சம்பவத்துடன் RAW அமைப்பிற்கு தொடர்புள்ளது என தான் நினைக்கவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஸ கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பிரேசில் சிறையில் இருந்து தப்ப முயன்ற சில்வா கைது (video)

சபாநாயகர் பதவி மஹிந்தவுக்கு

“இன்றும் பொதுத்தேர்தல் நடந்தால் நாம் வெற்றி பெறுவோம்”