சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கலாம்…

(UTV|COLOMBO)-மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக ஹபரணை -பொலன்னறுவை பிரதான வீதி தாழிறங்கியுள்ளது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மற்றும் நானு ஒயா பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக, தலவாக்கலை –டெஸ்போர்ட் ஊடாக நுவரெலியா வரை செல்லும் ஏ – 7 வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சரிந்த மண் மேட்டினை அகற்றும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துவருகின்றது.

இதேவேளை, மாத்தளை, குருணாகல் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேச செயலக எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி

கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை