சூடான செய்திகள் 1

தொலைபேசி உரையாடலில் இருப்பது நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல் என்பது உறுதியானது

(UTV|COLOMBO)-இலங்கை அரச தலைவர்களை கொலை செய்வது சம்பந்தமான தொலைபேசி உரையாடலில் இருப்பது, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் குரல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 123 ஒலிப்பதிவுகள் இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் குரல் மாதிரிகள் அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதனை இன்று

பண்டிகைக் காலத்தில் சாதாரண விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வசதி

சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் இன்று (14) விடுமுறை