(UTV|COLOMBO)-களுத்துறை மாவட்டத்தின் பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றி வரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், 15 வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நேற்றைய தினம் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த 20ஆம் திகதி அபி வெனுவன் அபி என்னும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக மாணவனை பொலிஸ் அதிகாரி அநுராதபுரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அநுராதபுரத்தில் உள்ள விடுதியொன்றில் வைத்து மாணவன் கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன், மருத்துவ பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பொலிஸ் பரிசோதகர் 2 பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது மனைவி சுகாதார துறையில் உயர் பதவியொன்றை வகித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]