வளைகுடா

பாரிய பிழையொன்றின் விளைவாகவே ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளார்

(UTV|SAUDI)-பாரிய பிழையொன்றின் விளைவாகவே, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் அதெல் அல்-ஜுபைர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்திற்கும் சவுதி முடிக்குரிய இளவரசரிற்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த நாட்களாக ஜமால் கஷோக்கி உயிரோடுள்ளதாக அறிவித்துவந்த சவுதி அரசாங்கம் தற்போது கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியிற்கு உண்மையிலேயே என்ன நேர்ந்தது என்பதை சவுதி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கடந்த இரண்டாம் திகதி இஸ்தான்புலிலுள்ள சவுதி தூதரகத்தில் காணாமற்போன ஜமால் கஷோக்கி, தூதரக கட்டிடத்திற்குள் வைத்து அங்குள்ள அதிகாரிகளினால் கொல்லப்பட்டதாக துருக்கி அரசாங்கம், சவுதி மீது குற்றஞ் சுமத்தியிருந்தது.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை ஜமால் கஷோக்கி உயிரிழந்துள்ளதை ஒப்புக் கொண்டதோடு அவர் விமானத்தில் வைத்து கொல்லப்பட்டதாகவும் சவுதி அரேபியா தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஜமால் கசோக்கியின் உடல் ஒவனில் வைத்து எரிக்கப்பட்டது?

வானத்தில் பறக்கும் இளவரசி-வைரலாகும் வீடியோ

குவைத் நாட்டில் நடந்த பஸ் விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி