சூடான செய்திகள் 1

நாலக டி சில்வாவிடம் 09 மணிநேர விசாரணை…

(UTV|COLOMBO)-பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று(18) நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றும்(19) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது

நேற்று(18) காலை 9.30-க்கு பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியதுடன் மாலை வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அங்கு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வறியப் பெண்களை இலக்கு வைத்து நிறுவனத்தலைவர்கள் செய்து வரும் காரியம்!!!

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க ரணில் இணக்கம்- ஜீவன்

நீதித்துறையினர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலை நாட்டில் ஏற்படக் கூடாது – ஜனாதிபதி