கிசு கிசுவிளையாட்டு

ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால்! கிடைக்கும் தண்டனை இதுவா?

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யாவின் குற்றச்சாட்டு உண்மை என்றால், அவருக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுத்தலைவராக ஜெயசூர்யா பொறுப்பேற்றார்.

இதை தொடர்ந்து 2014-ல் டி-20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்திலும் வெற்றி மேல் வெற்றியாக இலங்கை அணி குவித்தது.

தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்தது, உலகக்கோப்பையில் மோசமான செயல்பாடு என அடி வாங்கியதால் ஜெயசூர்யாவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

இதன் பின் அரவிந்த டி சில்வா பொறுப்பேற்ற போதும், 2016 ஏப்ரல் மாதம் ஜெயசூர்யா மீண்டும் தேர்வுக்குழு தலைவரானார்.

இதன் பின் இலங்கை அணி தொடர் தோல்வியையே சந்தித்தது. கடந்த ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் தொடரில் இலங்கை அணி அடிவாங்க, இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் மற்றும் ஊழல் காரணமாக கடும் பின்னடைவை ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து ஜெயசூர்யா தலைமையிலான தேர்வுக்குழுவில் இருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவிவிலகினர்.

இந்நிலையில் ஐசிசி. இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் முக்கியமான குற்றச்சாட்டுகள், ஊழல் புகார்கள் குறித்து ஐசிசி. ஊழல் தடுப்புபிரிவு விசாரணை நடத்தி, அந்நாட்டின் அதிபர், பிரதமர், மற்றும் விளையாட்டு அமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தது.

ஊழல் தடுப்புப்பிரிவு நடத்திய விசாரணைக்கு, ஜெயசூர்யா ஒத்துழைக்க மறுத்ததாகவும், தவிர, விசாரணையின் முக்கிய ஆவணங்களை மறைக்க, சேதப்படுத்த மற்றும் திருத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு 14 நாட்களுக்கு அவர் பதில் அளிக்கவும் ஐசிசி. உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஐசிசி. அதிகாரி கூறுகையில், ஜெயசூர்யா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் அவருக்கு குறைந்தது 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்புள்ளது எனவும் தவிர அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

லாஃப் விலை 4,000?

கிரிக்கெட் தடையிலிருந்து அஸ்வின் தப்பியது எவ்வாறு?

பாராளுமன்றத்தை கலைப்பது இப்போதைக்கு இல்லை