(UTV|YEMAN)-யேமனில் கடந்த 100 ஆண்டுகளில் பதிவாகும் மிகப்பாரிய பட்டினி நிலைமை தற்போது ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு 13 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் மேற்கொள்ளும் வான் தாக்குதல்களை இடைநிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் யேமனில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமானது.
ஈரானின் பின்புலத்தைக் கொண்ட ஹவுத்தி போராளிகள், யேமனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியதை அடுத்து, அங்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளின் பின்புலத்துடன் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதில் குறைந்த பட்சம் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று கூறப்படுகிறது.
இந்த யுத்தத்தின் காரணமாக யேமனில் பல மில்லியன் மக்கள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதிலும் சிக்கல் நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]